ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 2 ரூபாய் மட்டுமே.., எந்த நாட்டில் தெரியுமா?

1 Min Read

பெட்ரோல் விலை இந்தியர்களுக்கு எப்போதும் கவலை தரும் விஷயமாக உள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் பெட்ரோல் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

உலகளவில் எண்ணெய் வளங்கள் குறைவு, மத்திய கிழக்கு மோதல்கள், ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற காரணங்களால் எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது.

ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 2 ரூபாய் மட்டுமே.., எந்த நாட்டில் தெரியுமா? | Which Country Has The Cheapest Petrol In The World

இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் சராசரியாக ரூ.100க்கு மேல் விற்கப்படுகிறது. ஆனால் சில நாடுகளில் இதைவிட மிகவும் குறைவாக உள்ளது.

லிபியா உலகிலேயே மிகக் குறைந்த பெட்ரோல் விலையைக் கொண்ட நாடாக உள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் ₹2.15 மட்டுமே.

ஈரான் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் ₹2.5 ஆக விற்கப்படுகிறது.

வெனிசுலா மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் ₹3 ஆக உள்ளது.

 

ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 2 ரூபாய் மட்டுமே.., எந்த நாட்டில் தெரியுமா? | Which Country Has The Cheapest Petrol In The World

மேலும் குவைத் மற்றும் அங்கோலா போன்ற நாடுகளிலும் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது.

அதிக எண்ணெய் வளம், அரசின் மானியம் மற்றும் எண்ணெய் துறையில் அரசின் கட்டுப்பாடு ஆகியவை இந்த நாடுகளில் பெட்ரோல் விலை குறைவாக இருப்பதற்கான முக்கிய காரணங்கள்.

இதனால், இந்நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு மிகவும் மலிவான விலையில் பெட்ரோலை வழங்குகின்றன.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *