அமெரிக்காவில் நடைபெற்ற NO Kings போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
NO Kings போராட்டம்
அமெரிக்காவில் சட்ட அமலாக்கத்துறையின் கெடுபிடி, ஈரான் மீதான போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீது பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
ட்ரம்ப் 2வது முறையாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்து, ‘நோ கிங்ஸ்’ என்ற இயக்கம் அவருக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

நேற்று அமெரிக்காவில் நாடு முழுவதும் சுமார் 3,300 இடங்களில் நோ கிங்ஸ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் சுமார் 9 மில்லியன் பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
மினசோட்டா மாநிலடத்தின் செயின்ட் பாலில் உள்ள மினசோட்டா கேபிடல் புல்வெளியில் நடைபெற்ற போராட்டம் முக்கிய பங்கு வகித்தது. இங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர்.
கடந்த ஆண்டு டிசம்பரில், ஆபரேஷன் மெட்ரோ சர்ஜ் என்ற பெயரில் இங்கு பாரிய அளவில் குடியேற்ற ஒடுக்குமுறை சோதனை நடைபெற்றது. இதில், ரெனி குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி ஆகிய இரு அமெரிக்க குடிமகன்கள் கூட்டாட்சி முகவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ட்ரம்ப்பிற்கு எதிராக போரட்டம்

அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக “ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் மினியாபோலிஸ்” என்ற பாடலை பிரபல கலைஞர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் பாடினார்.
அமெரிக்க சுங்க மற்றும் குடிவரவு அமலாக்கத்துறைக்கு எதிரான மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பு, உங்களின் போராட்டம் இது இன்னும் அமெரிக்கா தான் என்னும் நம்பிக்கையை அளித்துள்ளது என்றும் கூறினார்.
குடியேற்ற விவகாரம் மட்டுமன்றி, ஈரான் மீதான போரை நிறுத்துமாறும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். சான் டியாகோவில் மட்டும் 40,000க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

வாஷிங்டனில் உள்ள ஆபிரகாம் லிங்கன் நினைவிடத்தைக் கடந்து சென்ற நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் “கிரீடத்தைக் கீழே போடு, கோமாளியே” (Put down the crown, clown) போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
குடியேற்ற விவகாரம் மட்டுமன்றி, ஈரான் மீதான போரை நிறுத்துமாறும், பில்லியனர்களின் பொருளாதார ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துமாறும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இந்த முறை போராட்டக்காரர்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பெரிய நகரங்களுக்கு வெளியேயுள்ள கிராமப்புற பகுதிகளில் இருந்து வந்திருந்தாக கூறப்படுகிறது.
இது “இடதுசாரி நிதியுதவி மூலம் நடத்தப்படும் இந்த நாடகங்களுக்குப் பொதுமக்களிடம் உண்மையான ஆதரவு இல்லை” என இந்தப் போராட்டங்களை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அபிகாயில் ஜாக்சன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி அமெரிக்க இராணுவத்தின் 250வது ஆண்டு விழா மற்றும் டிரம்ப்பின் 79வது பிறந்தநாள் விழாவை கண்டித்து ‘நோ கிங்ஸ்’ ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சுமார் 5 மில்லியன் பேர் கலந்து கொண்டனர்.
2வது முறையாக கடந்த அக்டோபர் 18 ஆம் திகதி ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கை மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக 2வது முறையாக ஆர்ப்பாட்டம் நடத்தினர் இதில் சுமார் 7 மில்லியன் பேர் கலந்து கொண்டதத்தாஜி கூறப்படுகிறது.




