நேபாளத்திற்கு அவசர உதவிகள் இந்தியாவினால் அனுப்பி வைப்பு

1 Min Read

ரசுவாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கென மனிதாபிமான உதவியாக 37.5 தொன் நிவாரணப் பொருட்கள் நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்றுத் தெரிவித்தார்.

நேபாள அதிகாரிகளுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருக்கும் இந்தியா, அனர்த்த நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிப்பதில் உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த நிவாரணப் பொருட்களை, நேபாளத்திற்கான இந்தியத் தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா, அந்நாட்டின் கலாசாரம், சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கட்கா ராஜ் பௌடெல் கணேஷிடம் கையளித்துள்ளார்.

இதேவேளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவுடன் தொடர்பு கொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்ததோடு திடீர் வெள்ளத்தைக் கையாள்வதற்காக, சாத்தியமான எல்லா மனிதாபிமான உதவிகளையும் வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியான் எக்ஸ்பிரஸ், த இந்து

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *