அமெரிக்க நிறுவனங்களில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

1 Min Read

அமெரிக்காவின் நீதித் திணைக்களம், நாசா விண்வெளி நிலையம், செனட் உள்ளிட்ட முக்கிய அரச நிறுவனங்களில் ஊடுருவல்களை மேற்கொள்ளவும் அதற்கான முயற்சிகளுக்கு காரணமாக இருந்த சீன ஊடுருவல் குழுவொன்றின் நடவடிக்கையை முறியடித்ததாக அமெரிக்கா நேற்று முன்தினம் தெரிவித்தது.

கிவ் ஸ்கேன் மற்றும் கிவ்.டி.ஆர் அவுட்டர் என்று அழைக்கப்படும் இரண்டு ஊடுருவல் தளங்களால் பயன்படுத்தப்பட்ட டொமைன்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் நீதித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க எரிசக்தித் துறை, சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை, தேசிய சுகாதார நிறுவனங்கள், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவில் உள்ள பெயரிடப்படாத நான்கு நிறுவனங்கள் இந்த ஊடுருவல் முயற்சிகளால் பாதிக்கப்பட்டவைகளில் அடங்கும் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

வொஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் மின்னஞ்சல் மூலம், நீதி திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தங்களுக்குத் தெரியாது. என்றாலும், சீன அரசாங்கம் சட்டத்திற்கு இணங்க அனைத்து வகையான இணையவழித் தாக்குதல்களையும் உறுதியாக எதிர்ப்பதோடு எதிர்த்தும் போராடுகிறது. சீனாவைக் களங்கப்படுத்த அல்லது அதன் நம்பகத்தன்மையைச் சீர்குலைக்க அமெரிக்கா இணையப் பாதுகாப்புப் பிரச்சினைகளைப் பயன்படுத்துகிறது என்று கூறியுள்ளார். ரொய்ட்டர்ஸ்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *