ரெட் ஸ்டார் வெற்றி

1 Min Read

இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் முன்னணி கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக் போட்டியில் நேற்று (24) நடந்த புளூ ஈகள்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான ஆட்டத்தில் ரெட் ஸ்டார் அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

கொழும்பு, சுகததாச அரங்கில் நடைபெற்ற போட்டியின் 31 ஆவது நிமிடத்திலேயே சுபுன் தனஞ்சய ரெட் ஸ்டார் சார்பில் கோல் புகுத்தினார். இதனைத் தொடர்ந்து புளூ ஈகள்ஸின்; பதில் கோல் திரும்பும் முயற்சிகள் வெற்றி அளிக்கவில்லை. ரெட் ஸ்டார் அணி இந்தத் தொடரில் பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும்.

முன்னதாக நேற்று முன்தினம்; நடைபெற்ற புளூ ஸ்டார் அணிக்கு எதிரான போட்டியில் கொழும்பு கால்பந்து கழகம் 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. கொழும்புக்காக அஹமட் ஷஸ்கி மற்றும் சலன பிரமன்த ஆகியோர் கோல் பெற்றனர்.

இந்த வெற்றியுடன் கொழும்பு அணி தனது புள்ளிகளை 14 ஆக அதிகரித்துக் கொண்டு ரினோன் அணியை (11) பின்தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *