16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் உத்தேச சட்டத்தை நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் நேற்று வெளியிட்டார்.
இச்சட்ட மூலத்தை வெளியிட்ட அவர் விடுத்த ஒரு அறிக்கையில், நியூசிலாந்து சிறுவர்களின் ஒரு தலைமுறைக்கு இழைக்கப்படும் தீங்கை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டு ஆய்வில், நியூசிலாந்தில் இளம் வயதினரில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒரு நாளைக்குக் குறைந்தது ஐந்து மணித்தியாலயங்களை சமூக ஊடகங்களில் செலவிடுவதாக தெரிய வந்துள்ளது.
இச்சட்டத்தின் கீழ், பயனர்கள் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதைச் சரிபார்க்க நியாயமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், இன்ஸ்டாகிராம், டிக்டொக் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட தளங்களுக்கு அவற்றின் உலகளாவிய வருவாயில் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் அவுஸ்திரேலியா 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களின் பயன்பாட்டுக்கு தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது நியூசிலாந்தும் இதற்கான முன்மொழிவை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏ.பி.சி நியூஸ்




