உலகிலேயே மிக உயர்ந்த இராணுவப் பதவியைப் பெற்று கின்னஸ் சாதனை படைத்த ‘சர் நில்ஸ் ஒலாவ் III’ என்ற கிங் பென்குயின் விரைவில் தந்தையாகப் போகிறது.எடின்பரோ உயிரியல் பூங்காவில் கடந்த 17 ஆண்டுகளில் கிங் பென்குயின் இனம் முட்டையிடுவது இதுவே முதல் முறையாகும். கடந்த ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த முட்டை இடப்பட்டது.
ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோ உயிரியல் பூங்காவில் அதன் புதிய இணையான ‘கானி’ என்ற பெண் பென்குயின் முட்டை ஒன்றை இட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூங்காவிற்கு கடந்த ஜனவரி மாதம் தான் ‘கானி’ உட்பட மூன்று பெண் பென்குயின்கள் கொண்டு வரப்பட்டன. அவை புதிய சூழலுக்குப் பழகி, இனப்பெருக்கம் செய்ய குறைந்தது 2027 ஆம் ஆண்டு வரை ஆகும் என பூங்கா பராமரிப்பாளர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக மிக விரைவிலேயே இந்த அரிய நிகழ்வு நடந்துள்ளது.
சர் நில்ஸ் ஒலாவ் ஒரு சாதாரண பென்குயின் அல்ல. நோர்வே நாட்டின் அரச பாதுகாப்புப் படையின் அதிகாரபூர்வ சின்னமாகவும், அதன் தலைமைத் தளபதியாகவும் இது விளங்குகிறது. பி.பி.சி




