பண்டாரகம, வெந்தேசி வத்த, மஸ்வில பகுதியில் சுமார் ரூ. 12 கோடி தெரு மதிப்பு கொண்ட பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரணை அதிரடிப்படை தலைமையகத்தின் விசேட நடவடிக்கைப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இவர் சிக்கியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 18.672 கி.கி. எடையுள்ள ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த இவர், மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் போதைப்பொருள் கடத்தலை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மற்றுமொரு பாரிய தொகை போதைப்பொருள் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




