போரினால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கும், ஆசியான் பிராந்தியக் கூட்டமைப்புக்கும் இடையில் மீண்டும் உறவை ஏற்படுத்த தாய்லாந்து முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, மியான்மரின் இராணுவ ஆட்சிக்குழுத் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான மின் ஆங் ஹ்லைங்கிற்கு தாய்லாந்து நேற்று செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
2021 இல் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய இந்த ஓய்வுபெற்ற ஜெனரல், பல மேற்கத்தியத் தடைகளுக்கு உள்ளாகியுள்ளார். அத்தோடு ஆசியான் அமைப்பு, தனது உச்சி மாநாடுகளில் பங்கேற்க மியான்மர் தலைவர்களுக்குத் தடை விதித்துள்ளது.
பேங்கொக்கில் நடந்த வரவேற்பு விழாவில், இராணுவ இசைக்குழுவொன்று தேசிய கீதங்களை இசைத்தது. அதன் பின்னர், மியான்மர் ஜனாதிபதி மின் ஆங் ஹ்லைங், தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விரகுலுடன் செங்கம்பளத்தில் நடந்து சென்று, இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர்.
நேற்று நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில், மின் ஆங் ஹ்லைங் அமைதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதாகவும், ஆசியானுடனான உறவுகளை மேம்படுத்துவதாகவும் உறுதியளித்தார்.மியான்மர் ஜனநாயகப் பாதையில் பயணித்து, ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது’ என்று அவர் கூறினார்.
ரொய்ட்டர்ஸ்




