இந்தோனேசியாவில் படகில் தீ ஐவர் உயிரிழப்பு, 41 பேர் மாயம்

1 Min Read

இந்தோனேசியாவின் மதுரா தீவில் படகொன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஐவர் உயிரிழந்ததோடு 41 பேர் காணாமல் போயுள்ளனர் என்று தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்து ஏற்பட்ட சமயம் படகில் 271 பயணிகளும் பணியாளர்களும் இருந்துள்ளனர். அவர்களில் 225 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இப்படகு கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சுரபயாவில் இருந்து தெற்கு சுலவேசியில் உள்ள மக்காசார் நகருக்கு சென்று கொண்டிருந்த சமயமே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

படகில் எப்படி தீ ஏற்பட்டது என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்தோனேசியாவின் போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே முதன்மையானது என்றும், தீ பிடித்துள்ள படகில் இருந்து பயணிகளின் வெளியேற்றம் விரைவாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுடனும் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொய்ட்டர்ஸ், த நஷனல்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *