பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி அவரது கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், சட்டத்தணிகள், மனித உரிமை ஆர்வலர்கள் லாகூர் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இம்ரான் கானின் சிறைத்தண்டனைக்கு மூன்றாவது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இந்த ஆர்ப்பாட்டங்கள் நேற்று முன்தினம் நடத்தப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.
2018 முதல் 2022 ஏப்ரல் வரை பாகிஸ்தானின் பிரதமராகப் பணியாற்றிய இவர், நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்டதோடு ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அதே வழக்கில் அவரது மனைவிக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தங்கள் தந்தை கைது செய்யப்பட்டு மூன்றாம் ஆண்டு நிறைவடைந்துள்ளதோடு, ‘கடந்த ஏழு மாதங்களாக அவரது குடும்பத்தினர், மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படாததால், தங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்காதுள்ளது என்று அவரது மகன்களாக காசிம் கான், சுலைமான் ஈசா கான் ஆகியோர் கூறியுள்ளனர்.
அல் ஜசீரா, சி.என்.என்.




