அமெரிக்காவில் ஏவுகணை பற்றாக்குறை:

1 Min Read

ஏவுகணைப் பற்றாக்குறை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதற்கு வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளதோடு அது போலிச் செய்தி எனவும் கூறியுள்ளது.ஏவுகணைப் பற்றாக்குறை குறித்துத் தான் ஏன் தவறாக வழிநடத்தப்பட்டேன் என்று கேட்டு ட்ரம்ப் பாதுகாப்பு செயலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள நாட்டுப்புற ஓய்விடமான கேம்ப் டேவிட்டில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு இடையில் இந்த வாக்குவாதம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

ஈரானுடனான போர்ச்சூழல் ஆறாவது மாதமாக நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா தனது ஏவுகணைக் கையிருப்புகளில் கிட்டத்தட்ட அனைத்தையும் பயன்படுத்திவிட்டது. நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு இடைமறிப்பான்கள் ஆகியவற்றில் ஏற்பட்ட பற்றாக்குறையின் விளைவாக சமீபத்திய நாட்களில் அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுப்பதிலிருந்து பின்வாங்குவதற்குக் காரணமாக கூறுவதும் தெரிந்ததே.

டெலிகிராப்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *