கின்னஸ் சாதனையை நெருங்கும் ஆர்ஜன்டீனாவுக்கு எதிரான மனு

1 Min Read

ஆர்ஜன்டீனாவை பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் இருந்து நீக்கும்படி கோரும் ஒன்லைன் மனு ஒன்று 23 மில்லியனுக்கும் அதிகமான கையொப்பங்களைப் பெற்று கின்னஸ் உலக சாதனையை நெருங்கியுள்ளது.

பிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் ஆர்ஜன்டீன 0–1 என தோல்வி அடைந்த நிலையில் போட்டிக்குப் பின்னர் இடம்பெற்ற மோதல் தொடர்பில் ஆர்ஜன்டீன வீரர்கள் விசாரணையை எதிர்கொண்டுள்ளனர்.

இம்முறை உலகக் கிண்ணத்தில் ஆர்ஜன்டீனா மற்றும் அதன் தலைவர் லியோனல் மெஸ்ஸிக்கு சாதகமாக பிஃபா மற்றும் நடுவர்கள் நடந்துகொண்டதாக விமர்சனங்கள் வலுத்த நிலையிலேயே இந்த ஒன்லைன் மனு அறிமுகம் செய்யப்பட்டது. ‘ஆர்ஜன்டீனாவை வெளியேற்று’ என்ற தலைப்பிலான இந்த மனுவுக்கு 170 நாடுகளைச் சேர்ந்த 23 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதன்படி ஒன்லைன் மனு ஒன்றுக்கு அதிக கையெழுத்து பதிவான கின்னஸ் சாதனையை இந்த மனு நெருங்கியுள்ளது.

உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகள் செலுத்த முடியாத கடன்களை 2000ஆம் ஆண்டின் இறுதிக்குள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய 1997ஆம் ஆண்டின் ஜூபிலி 2000 இயக்கத்தின் மனுவுக்கு 24 மில்லியனுக்கும் அதிகமாக கையொப்பங்கள் பதிவானதே இதுவரை கின்னஸ் சாதனையாக உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *