கொழும்போ கெப்ஸ் அணிக்கு எதிரான லங்கா பிரீமியர் லீக் போட்டியில் நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. ஜப்னா அணி முதல் போட்டில் தோல்வியுற்ற நிலையில் அடுத்தடுத்து பெறும் இரண்டாவது வெற்றியாக இது அமைந்தது.
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நேற்று (22) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ஜப்னா அணி 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. சமிந்து விக்ரமசிங்க 22 பந்துகளில் 43 ஓட்டங்களை விளாசினார்.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த கொலம்போ கெப்ஸ் அணி 9 ஓட்டங்களுக்கு முதல் இரு விக்கெட்டுகளையும் இழந்ததோடு அணித் தலைவர் கமிந்து மெண்டிஸ் முதல் வரிசையில் சிறப்பாக ஆடி 42 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பெற்றார். எனினும் பின் வரிசை விக்கெட்டுகளை முக்கிய இடைவெளிகளில் பறிபோனதால் கொலம்போ கெப்ஸ் அணிக்கு வெற்றி இலக்கை எட்டுவது சிரமமானது.
அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் ஜப்னா கிங்;ஸ் சார்பில் லிசாட் வில்லியம் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்ததோடு டில்ஷான் மதுஷங்க மற்றும் டிரவீன் மதியூ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியுடன் ஜப்னா அணி இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் 2 வெற்றி ஒரு தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியது. கொலம்போ கெப்ஸ் இதுவரை ஆடிய 3 ஆட்டங்களில் இரண்டு தோல்வி, ஒரு வெற்றியை பெற்றுள்ளது.




