இலங்கை வரும் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிராக சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை ஒருநாள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையே மூன்று ஒரு மற்றும் மூன்று டி20 போட்டிகள் இடைபெறவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் ஜூலை 23, 25 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
இதற்கான இலங்கைக் குழாத்தில் விக்கெட் காப்பாளர் அனுஷ்கா சஞ்சீவனி மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். சஞ்சீவனி கடைசியாக 2025 ஒருநாள் உலகக் கிண்ணத்திலேயே இலங்கை அணியில் இடம்பிடித்திருந்தார்.
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடரில் உடல் தகுதியின்மையால் இடம்பெறத் தவறிய விஷ்மி குணரத்னவும் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். அதேபோன்று பதின்ம வயது வேகப்பந்து வீராங்கனை ரெஷ்மிகா செவ்வந்தியும் இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஒருநாள் குழாம்: சமரி அத்தபத்து (தலைவர்), விஷ்மி குணரத்ன், ஹசினி பெரேரா, ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹன்சிமா கருணாரத்ன, கவிஷா தில்ஹாரி, நிலக்ஷிகா சில்வா, அநுஷ்கா சஞ்சீவனி, சேதனா விமுக்தி, இனோகா ரணவீர, நிமேஷா மீபகே, இமேஷா துலானி, தெவ்மி விஹங்கா, ரஷ்மிகா செவ்வந்தி, காவ்யா காவிந்தி.




