116 பயணிகளுடன் கயானா கடலில் மூழ்கிய படகு

1 Min Read

116 பயணிகளை ஏற்றிச் சென்ற படகொன்று தென்னமெரிக்க நாடான கயானா கடற்கரையில் மூழ்கியுள்ளது. அப்படகில் இருந்தவர்களில் 53 பேர் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜோர்ஜ் டவுனிலிருந்து போர்ட் கைடுமாவுக்குச் செல்லும் வழியில், அயர்ன் பன்ட் அருகே எம்.வி பரிமா என்ற படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு 11:01 மணிக்கு ஒரு ஆபத்து அழைப்பு பெறப்பட்டதைத் தொடர்ந்து, அரச மற்றும் தனியார் படகுகளைக் கொண்டு அவசர தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஜுவான் எட்ஜில் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெசல் ஃபைண்டர் தளத்தின் பட்டியலின்படி, எம்.வி பரிமா படகு 1939-ல் கட்டப்பட்டதோடு 40 மீற்றர் நீளம் கொண்டது ஆகும்.

பி.பி.சி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *