இறுக்கமான நிதிக் கொள்கையை கடைபிடிக்க பங்களாதேசத்திற்கு பரிந்துரை

1 Min Read

பணவீக்கத்தைக் குறைக்கவும் அந்நியச் செலாவணிக் கையிருப்பை மீண்டும் கட்டியெழுப்பவும் இறுக்கமான பணவியல் மற்றும் விவேகமான நிதிக் கொள்கைகளைப் பேணுமாறு சர்வதேச நாணய நிதியம் பங்களாதேசத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

பங்களாதேசத்திற்கான ஐந்து நாட்கள் விஜயத்தை நிறைவுசெய்து கொண்ட சர்வசேத நாணய நிதியத்தின் அலுவலர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.பங்களாதேசத்தின் பொருளாதார வளர்ச்சி 2027 நிதியாண்டில் 3.5 சதவீதமாகக் குறையும் என்றும், நடுத்தர காலப்பகுதியில் அது மேலும் பலவீனமடைந்து 3 சதவீதத்திற்கும் கீழே செல்லாமென்றும் அவர்கள் கணித்துள்ளனர்.

அந்த குழு விடுத்துள்ள அறிக்கையில், மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் பங்களாதேசத்தின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அதனால் நிதி, நிதியியல் மற்றும் பணவீக்க அழுத்தங்களை பங்களாதேசம் தொடர்ந்தும் எதிர்கொள்கிறது. உலகளாவிய ரீதியில் பண்டங்களது விலைகள் அதிகரிப்பு, விநியோகத் தடைகள் என்பன பணவீக்க அழுத்தங்களைப் புதுப்பித்து,

இறக்குமதி மற்றும் மானியச் செலவுகளை உயர்த்தி, பொருளாதாரத்தின் மீதான அழுத்தங்களை அதிகரிக்கச் செய்துள்ளன, அதேநேரம் வங்கித் துறையிலும் நெருக்கடி அதிகமாகவே காணப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *