100 மில்லியன் மக்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுத்த கனடா

1 Min Read

கனடாவில் நூறு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வெப்ப எச்சரிக்கையின் கீழ் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஒட்டாவா, டொராண்டோவில் வெப்பநிலை 38 பாகை செல்சியஸை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளில் அதிக வெப்ப நிலை நிலவுவதால், கனடாவின் சில பகுதிகளில் காட்டுத்தீயும் பரவியுள்ளது.
வடக்கு கியூபெக் மற்றும் வடமேற்கு ஒன்டாரியோவில் ஏற்பட்ட காட்டுத்தீயிலிருந்து புகை பரவியதால், நேற்று முன்தினம் காலையில் மாண்ட்ரியலில் வானம் மஞ்சள் நிறமாக காணப்பட்டது.

இந்நிலையில் கனடாவின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், காற்றின் தரம் மோசமடைந்து, அது ஆரோக்கியத்திற்கு அதிக ஆபத்துகளை விளைவிக்கக்கூடியதாக மாறக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தெற்கு மொன்டானாவில் உள்ள பில்லிங்ஸ் நகரில் 44 பாகை செல்சியஸ் வெப்பநிலை நேற்று முன்தினம் பதிவானதோடு உட்டாவின் சால்ட் லேக் நகரின் வெப்பநிலை 43 பாகை செல்சியஸை எட்டியது என வானிலை ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

புதைபடிம எரிபொருள் பல தசாப்தங்களாகப் பாவிக்கப்படுவதால் வெளியேறும் காபனீரொட்சைட்டின் வெளியேற்றத்தால் உருமாற்றம் அடைந்த காலநிலை அமைப்பையே இந்நிலை பிரதிபலிக்கிறது என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
டெலிகிராப்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *