ட்ரோன் உற்பத்திக்கு உக்ரைனுடன் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம்

1 Min Read

உக்ரைனுடன் ட்ரோன் உற்பத்திக்கான ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியம் நேற்று கையெழுத்திட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணையர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்தார்.

உக்ரைனின் நிபுணத்துவத்தை ஐரோப்பிய கைத்தொழில்துறைத் திறனுடன் இணைத்து, கூட்டுத் திட்டங்களை ஸ்தாபித்து ட்ரோன் உற்பத்தியை அதிகரிக்கவென உக்ரைனும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த ஒப்பந்தம் உக்ரைனின் புத்திசாலித்தனத்தையும் ஐரோப்பாவின் கைத்தொழில் அளவையும் ஒன்றிணைக்கும்.

உக்ரைன் தனிப்பட்ட நாடுகளுடன் இதுபோன்ற பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. கடந்த வாரம் அங்காராவில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில், ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி மேலும் மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் இந்த ஒப்பந்தங்களின் மொத்த எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது. என்றாலும் நேற்று கையெழுத்தான இந்த ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் உள்ள நாடுகள் மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கும் நோக்கம் கொண்ட முதல் ஒப்பந்தமாகும். ட்ரோன் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை இயக்குவது எப்படி என்பது குறித்து நீங்கள் பெற்றுள்ள அறிவு உண்மையிலேயே தனித்துவமானது’ என்றும் அவர் கூறினார்.
ரொய்ட்டர்ஸ்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *