பொருளாதார உறவுகளை விரிவுபடுத்த அமெரிக்க – ஈராக் தலைவர்கள் உறுதி

1 Min Read

பொருளாதார உறவுகளை விரிவுபடுத்தவும், ஈராக்கின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும் அமெரிக்க, ஈராக் தலைவர்கள் உறுதிபூண்டுள்ளனர்.
அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை நேற்று முன்தினம் வௌ்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சமயமே மேற்படி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது, அமெரிக்காவுடனான உறவுகள் இராணுவ ரீதியான நிலையிலிருந்து பொருளாதார ரீதியான நிலைக்கு மாறி வருவதாக ஈராக் பிரதமர் கூறியதோடு, ஆயுதப் பிரிவுகளின் ஆயுதங்களைக் களைவதாகவும் உறுதியளித்துள்ளார்.

அரசியலில் எந்தப் பின்னணியும் இல்லாத தொழிலதிபரான அல்-ஜைதிக்கு ட்ரம்ப் தனது ஆதரவைத் தெரிவித்ததோடு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈராக்கின் முன்னாள் பிரதமர் நூரி அல்-மாலிகியின் பிரதமர் பதவிக்கு இவர் பகிரங்கமாக சவால் விட்டமை தெரிந்ததே.

இச்சமயம் கருத்து தெரிவித்த ட்ரம்ப், அல்-ஜைதி ஒரு அற்புதமான வெற்றியாளர். ஈராக்கிடம் அதன் எண்ணெய் மற்றும் பிற காரணங்களால் மகத்தான ஆற்றல் உள்ளது. அதன் எண்ணெய்யின் அடிப்படையில், நாங்கள் நிறைய ஒப்பந்தங்களைச் செய்யப் போகிறோம். நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போகிறோம். நாங்கள் அதிக அளவு எண்ணெய்யை வெளியே எடுக்கப் போகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *