பிரம்மோஸ் ஏவுகணை ஒப்பந்தத்தில் இந்தோனேசியா-இந்தியா கைசாத்து

1 Min Read

பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணை அமைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தோனேசியாவும் இந்தியாவும் நேற்று ஜகர்த்தாவில் கையெழுத்திட்டுள்ளன.

இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பிற்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக இந்தோனேசிய ஜனாதிபதி மாளிகை நேற்று தெரிவித்தது.

இந்தோனேசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கான ஆறு நாட்கள் இராஜதந்திர விஜயத்தின் தொடக்கமாக நேற்று முன்தினம் ஜகர்த்தாவை சென்றடைந்த இந்தியப் பிரதமர், இந்தோனேசிய ஜனாதிபதியை நேற்று சந்தித்து இரு தரப்பு பேச்சுக்களை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கைச்சார்த்திடப்பட்டுள்ளது.

இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியில் ஏவுகணைகளைத் தயாரிக்கும் பிரம்மோஸ் நிறுவனமும், இந்தோனேசியாவின் பாதுகாப்பு அமைச்சும் பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணை அமைப்பையும் அஸ்த்ரா ஏவுகணையையும் இந்தோனேசியாவுக்கு இந்தியா வழங்கும் என்று அரச அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டிய செய்தியை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ரொய்ட்டர்ஸ்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *