பிரித்தானிய இராணுவத்தின் சீருடை உள்நாட்டில் தயாரிக்கப்பட வேண்டும்

1 Min Read

இராணுவத்தினருக்கான சீருடைகள் பிரித்தானியாவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் என பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது.

இராணுவத்தினருக்கான சீருடைகள் வெளிநாட்டில் இருந்து பெறுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்ற கவலைகள் தெரிவிக்கப்படும் நிலையில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானிய இராணுவத்தினரின் ஆடைகளுக்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே 2018 மற்றும் 2023 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த புடவைக் கைத்தொழில் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டது. அந்த நிறுவனம் இந்த ஆடை உற்பத்தியின் பெரும்பகுதியை வௌிநாடொன்றுக்கு வழங்கியது.

இவ்வாறான நிலையில் சுமார் 526 மில்லியன் பவுண் மதிப்புள்ள மூன்று புதிய இராணுவ சீருடை உற்பத்தி ஒப்பந்தங்களுக்காக பிரித்தானியாவின் உற்பத்தி நிறுவனங்கள் போட்டியிட்டுக் கொண்டிருந்த வேளையில் இந்தத் தலையீடு வந்துள்ளதோடு பாதுகாப்பு அமைச்சும் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறது.

டெலிகிராப்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *