BCAS Campus தனது 2025 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவை பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பெருமையுடன் நடத்துகிறது.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற கல்வித் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்த 900க்கும் மேற்பட்ட பட்டதாரிகளின் சாதனைகள் இந்நிகழ்வில் கொண்டாடப்படுகின்றன.
இவ்விழாவிற்கு, BCAS வளாகத்தின் Cheif Executive Officer Mr. Teresh Amarathunga, Vice Chanselor Dr. Ruwan Abesekara உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர் தலைமை தாங்குகின்றனர்.
இவர்களின் தலைமைத்துவம், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வியை வழங்கும் இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக BCAS வளாகத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றது.
இப்பட்டமளிப்பு விழாவில் மொத்தமாக 906 பட்டதாரிகள் கௌரவிக்கப்படுகின்றனர்.
இவர்களில் 241 இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள், 625 Pearson Higher National Diploma பட்டதாரிகள், மற்றும் 40 Pearson Level 7 Diploma பட்டதாரிகள் உள்ளடங்குகின்றனர் இப்பட்டமளிப்பு விழா, மதிப்பிற்குரிய கல்வியாளர்கள், தொழில்முறை நிபுணர்கள் மற்றும் நிறுவன பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இரண்டு சிறப்புமிக்க அமர்வுகளாக நடைபெறுகிறது.




