‘முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாடு’ போதைப்பொருள் ஒழிப்பு ஊடக மையம் திறந்து வைப்பு

1 Min Read

‘முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாடு’ போதைப்பொருள் ஒழிப்பு ஊடக மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 07, விஜேராமவில் நேற்றையதினம் (26) மேற்படி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார், இராணுவம் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களின் ஒன்றிணைந்த செயற்பாட்டின் மூலம் குறித்த அலுவலகம் இயங்கும்.

1818 எனும் உடனடி தொலைபேசி இலக்கம் ஊடாக இவ்வலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியும்.

முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக பெனாண்டோவின் உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்தப்பட்ட வந்த இல்லமே இதற்கான அலுவலகமாக பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அலுவலகம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், அமைச்சின் செயலாளர் ரவீ செனவிரத்ன, பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், முப்படை ஊடகப் பேச்சாளர்கள், அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *