“The Infinity” ஐ அறிமுகப்படுத்தும் Groundworth

1 Min Read

Groundworth (Pvt) Ltd நிறுவனம், கொழும்பின் மிக வேகமாக விரிவடைந்து வரும் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான பிலியந்தலை – பொல்கசோவிடவில் அமைந்துள்ள ஒரு உயர் ரக காணி மேம்பாட்டுத் திட்டமான ‘The Infinity by Groundworth’ இன் அறிமுகத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. ‘The Infinity’ திட்டமானது நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் வளர்ந்து வரும் குடியிருப்பு நிலப்பரப்பிற்குள் எளிதாக அணுகும் வசதி, சௌகரியம் மற்றும் நீண்டகால மூலதன மதிப்பை ஒன்றிணைக்கிறது. இது நவீன குடியிருப்பு வாழ்க்கை மற்றும் அதிக வளர்ச்சி கொண்ட முதலீட்டு வாய்ப்புகளுக்காக மூலோபாய ரீதியாக நிறுவப்பட்டுள்ளது.

‘The Infinity’ ஆனது தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பாதை வலையமைப்பிலிருந்து மிகக் குறுகிய தூரத்தில் அமைந்துள்ளதால், கொழும்பு மற்றும் ஏனைய புறநகர் வர்த்தக மையங்களுக்கு சிறந்த போக்குவரத்து இணைப்பை வழங்குகிறது. இக்காணி மேம்பாட்டுத் திட்டம் கொழும்பு – ஹொரணை வீதியிலிருந்து 500 மீற்றர் தூரத்திலும், கஹதுடுவ பரிமாற்றத்திலிருந்து 1.5 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளதால், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை எளிதாக அணுக முடியும். அது மாத்திரமன்றி, இது பிலியந்தலை மற்றும் கெஸ்பேவ ஆகிய நகரங்களுக்கு அருகில் அமைந்துள்ளதால், வலுவான உட்கட்டமைப்பு வளர்ச்சியைக் கொண்ட, நடைமுறைக்கேற்ற ஒரு குடியிருப்பு முகவரியாகத் திகழ்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *