சுதேசி கொஹொம்ப பேபி சவர்க்காரத்திற்கு SLS சான்றிதழ்

1 Min Read

கொஹொம்ப பேபி சவர்க்காரம் குழந்தையின் சருமத்திற்கு பாதுகாப்பானது என்பதுடன், மிருதுவானது என சான்றளிக்கப்பட்டுள்ளதை இந்த SLS சான்றிதழ் தாய்மார்களுக்கு உறுதிப்படுத்துவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. இயற்கையான, மிருதுவான பாதுகாப்பு மற்றும் மூலிகைகள் மீதான நம்பிக்கை ஆகியன கொஹொம்ப பேபி பராமரிப்பு தயாரிப்புகளின் அடையாளங்களாகத் திகழ்வதுடன், இலங்கையில் மிகவும் நம்பிக்கையான மற்றும் மிகவும் விரும்பப்படும் மூலிகை சார்ந்த குழந்தை பராமரிப்பு வர்த்தக நாமங்களில் ஒன்றாக இது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள உதவியுள்ளது. SLS இனால் சான்றளிக்கப்பட்ட உயர்தர தரநிலைகள் மற்றும் செயன்முறைகளை பின்பற்றுவதன் மூலம், தமது குழந்தை கொஹொம்ப பேபியின் பாதுகாப்பான இயற்கையான அரவணைப்பில் இருப்பதை புதிய பெற்றோருக்கு நிம்மதியுடன் உறுதி செய்து கொள்ளலாம் என சுதேசி நிறுவனத்தின் பிரதித் தலைவியும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான சுலோதரா சமரசிங்க தெரிவித்துள்ளார்.

SLS 547 என்பது குழந்தைகளுக்கான சவர்க்காரத்திற்கான இலங்கை கட்டளை விபரக்குறிப்பாகும் (Sri Lanka Standard Specification for Baby Soap). இது குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் சவர்க்காரங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகிய தேவைகளை நிர்ணயிக்கிறது. குழந்தைகளுக்கான சவர்க்காரங்கள் பாதுகாப்பானவை, எரிச்சலூட்டாதவை, உயர்தரமானவை, மென்மையானவை மற்றும் குழந்தைகளின் சருமத்திற்கு ஏற்றவை என்பதை உறுதி செய்வதற்கான தேவைகளை SLS 547 தரநிலை உள்ளடக்கியுள்ளது. இந்தத் தரநிலையானது இறக்குமதி மற்றும் உள்ளூர் உற்பத்தி ஆகிய இரண்டிற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இது SLSI இறக்குமதி ஆய்வுத் திட்டத்தின் கீழ் சரிபார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *