மக்கள் வங்கி சமீபத்தில் தனது உடுப்பிட்டி சேவை மையத்தை 18.05.2026 அன்று வசதியான புதிய இடத்தில் திறந்து வைத்துள்ளது.
மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறை கிளையின் முகாமையின் கீழான இந்த சேவை மையம், தற்போது உடுப்பிட்டி மற்றும் சூழவுள்ள பகுதி வாடிக்கையாளர்களுக்கு நவீன டிஜிட்டல் வங்கி வசதிகள் மற்றும் ஏனைய வங்கிச்சேவைகளை எளிதாகப் பெற வழிவகுக்கிறது.
இதன் திறப்பு விழாவில், யாழ். பிராந்திய முகாமையாளர் மு.மதியழகன், உதவி பிராந்திய முகாமையாளர்கள் திருமதி. யா. சுரேஷ்குமார் மற்றும். த.பாரத் ரமணா, வல்வெட்டித்துறை கிளை முகாமையாளர் திரு.எஸ்.மோகனச்செல்வன் மற்றும் உடுப்பிட்டி சேவை மைய முகாமையாளர் திருமதி.யோ.மதனராணி, வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.



