சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் புதுப்பிக்கப்பட்ட ஒருநாள் தரவரிசையில் இலங்கை அணி தொடர்ந்தும் 6 ஆவது இடத்தை தக்கவைத்திருப்பதோடு முதல் இடத்தில் இந்திய அணி மாற்றிமின்றி நிலைத்துள்ளது.
எனினும் கடந்த திங்கட்கிழமை (11) புதுப்பிக்கப்பட்ட தரவரிசையில் முதல் 10 இடங்களிலும் ஒரே மாற்றமாக 4 ஆவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் தென்னாபிரிக்க அணி 4 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. பாகிஸ்தான் அணி கடந்த மார்ச் மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 1–2 என இழந்ததை அடுத்தே இந்த பின்னடைவை சந்தித்துள்ளது.
தரவரிசையில் நியூசிலாந்து அணி 2ஆவது இடத்திலும் அவுஸ்திரேலியா 3ஆம் இடத்திலும் நீடிக்கின்றன. இலங்கை அணி கடைசியாக கடந்த ஜனவரியில் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடியபோது அந்தத் தொடரை 1–2 என இழந்தது,



