டி20 உலகக் கிண்ணத்தை புறக்கணித்தது தொடர்பில் பங்களாதேஷ் விசாரணை

1 Min Read

இலங்கை மற்றும் இந்தியாவில் இந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கிண்ணத்தை பங்களாதேஷ் புறக்கணித்தது தொடபில் விசாரிக்க அந்நாட்டு தேசிய விளையாட்டுக் கௌன்சில் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் முழுமையான விசாரணையை நடத்தி அடுத்த 15 வேலை நாட்களுக்குள் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்படி விசாரணை குழுவுக்கு மேற்படி கௌன்சில் அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இடம்பெற்ற ஒரே பங்களாதேஷ் வீரரான முஸ்தபிசுர் ரஹ்மான் அந்தத் தொடரில் இருந்து நீக்கப்பட்ட சம்பவத்தை அடுத்தே பங்களாதேஷ் டி20 உலகக் கிண்ணத்தை இந்தியாவில் ஆடுவதற்கு மறுத்தது. பங்களாதேஷ் போட்டியை இலங்கைக்கு மாற்றக் கோரியும் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் அதனை ஏற்க மறுத்த நிலையிலேயே பங்களாதேஷ் உலகக் கிண்ணத்தை புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *