ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்தை உருவாக்க ஸ்பெய்ன் அழைப்பு

1 Min Read

நேட்டோ வழங்கும் பாதுகாப்புகளுக்குப் பதிலாக, ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று ஸ்பெயின் அழைப்பு விடுத்துள்ளது.

‘பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க அமெரிக்க தலைமையிலான இராணுவக் கூட்டணியை நம்பியிருக்க முடியாது’ என ஸ்பெய்ன் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பெரெஸ் தெரிவித்துள்ளார்..

ஐரோப்பிய ஒன்றியம் நேட்டோவை நம்பியிருக்கவில்லை என்றால், டொனால்ட் ட்ரம்ப் அதன் பாதுகாப்பை பணயக்கைதியாக வைத்திருக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதுகாப்புச் செலவினங்களை ஐந்து சதவீதமாக அதிகரிக்க ஸ்பெயின் மறுத்ததால், அந்நாட்டின் மீது கூடுதல் வர்த்தக வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

அத்தோடு ஈரானில் தனது போருக்கு ஆதரவளிக்க ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மறுத்ததால், அங்குள்ள தளங்களிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறலாம் அல்லது அந்நாட்டை நேட்டோவிலிருந்து இடைநீக்கம் செய்யலாம் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *