பங்களாதேஷ் அணி முன்னிலை

1 Min Read

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாட ஆரம்பத்திருக்கும் பங்களாதேஷ் அணி 34 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காகவே பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மிர்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸுக்காக 413 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலைவர் நஜ்முல் ஹொஸைன் ஷான்டோ 101 ஓட்டங்களைக் குவித்தார்.

இந்நிலையில் முதல் இன்னிஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணிக்கு ஆரம்ப வீரர் அசான் அவைஸ் (103) சதம் பெற்றார். இதன்மூலம் ஆட்டத்தின் மூன்றாவது நாளான நேற்றைய தினத்திலும் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த அந்த அணி 100.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 386 ஒட்டங்களை குவித்தது. பந்துவீச்சில் மஹ்தி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் 27 ஓட்டங்களால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற நிலையிலேயே நேற்று கடைசி நேரத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின்போதும் அந்த அணி 1.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 7 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதன்படி பங்களாதேஷ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளும் கைவசம் இருக்க 34 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. இன்று போட்டியின் நான்காவது நாளாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *