சுப்மனின் அதிரடியால் குஜராத்துக்கு வெற்றி

1 Min Read

அணித் தலைவர் சுப்மன் கில்லின் அதிரடி ஆட்டத்தின் மூலம் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் 77 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் (09) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆரம்ப விக்கெட்டுக்கு கில் மற்றும் சாய் சுதர்ஷன் 118 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர். கில் 44 பந்துகளில் 84 ஓட்டங்களைப் பெற்றதோடு சுதர்ஷன் 36 பந்துகளில் 55 ஓட்டங்களைப் பெற்றார். இதன்மூலம் குஜராத் அணி 20 ஓவர்களிலும் 4 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றது.

இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த ராஜஸ்தான் றோயல்ஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் 16.3 ஓவர்களில் 152 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்போது இலங்கையின் தசுன் ஷானக்கவுக்கு இம்முறை ஐபிஎல் இல் முதல் முறை துடுப்பெடுத்தாட வாய்ப்பு கிடைத்ததோடு அவர் 11 பந்துகளில் 16 ஓட்டங்களையே பெற்றார். ரஷித் கான் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியுடன் குஜராத் ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் சன்ரைசஸுக்கு அடுத்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. எனினும் முதல் இரு இடங்களில் உள்ள அணிகள் தலா 14 புள்ளிகளை பெற்றுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *