மாயமான இரு பல்கலைக்கழக மாணவர்கள்… அதிகாரிகள் வெளியிட்ட பயங்கரமான பின்னணி

2 Min Read

மல் போன இரண்டு முனைவர் பட்ட மாணவர்கள் தொடர்பான வழக்கில், புளோரிடா மாகாண காவல்துறை அதிகாரி ஒருவர் திகிலூட்டும் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

திட்டமிட்டுக் கொலை

தம்பா பே பகுதி பாலம் ஒன்றின் அருகே ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்ட மனித உடற்பாகங்கள் 27 வயதான நஹிதா பிரிஸ்டியுடையது என்று ஹில்ஸ்பரோ மாவட்ட ஷெரிப் சாட் குரோனிஸ்டர் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.

மாயமான இரு பல்கலைக்கழக மாணவர்கள்... அதிகாரிகள் வெளியிட்ட பயங்கரமான பின்னணி | Tampa Sheriff Gruesome Update

பிரிஸ்டியும் சக முனைவர் பட்ட மாணவரும் அவரது காதலருமான 27 வயதான ஜமீல் லிமோனும், கடைசியாக ஏப்ரல் 16 அன்று தம்பா பகுதியில் காணப்பட்டனர்.

இந்த நிலையில், லிமோனின் உடல் ஏப்ரல் 24 அன்று ஹோவர்ட் ஃபிராங்க்லேண்ட் பாலத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து அவருடைய அறைத் தோழரான 26 வயது ஹிஷாம் சலே அபுகர்பியே, அதே நாளில் கைது செய்யப்பட்டார்.

ஆயுதத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டுக் கொலை செய்ததாக இரண்டு முதல் நிலை குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் அன்று முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதல் நிலை குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு மரண தண்டனை விக்கப்படும்.

இதனிடையே, இரண்டு நாட்கள் கழித்து, ஹோவர்ட் ஃபிராங்க்லேண்ட் பாலத்தின் அருகில் மற்றொரு கருப்பு குப்பைப்பை காணப்பட்டது. லிமோனுடையதைப் போலவே, அந்தப் பையும் முடிச்சிடப்பட்டிருந்தது.

அப்பகுதியில் கயாக் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவரின் மீன்பிடி கயிறுகளில் ஒன்று அந்தப் பையில் சிக்கிய நிலையில், ​​பிரிஸ்டியின் உடற்பாகங்களைக் கண்டெடுத்தனர். அந்தப் பையில் தாங்க முடியாத ஒரு துர்நாற்றம் இருந்ததாக அவர்கள் கூறினர்.

அழுகிய நிலையில்

இந்த நிலையில், தற்போது பிரிஸ்டியின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும், அவரது உடலை அவர்களிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிஸ்டியின் உடலை டிஎன்ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடையாளம் காணப்பட்டதாகவே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பிரிஸ்டியின் உடல் அடையாளம் காணப்படுவதற்கு முன்பு, பையில் இருந்த சடலம் மோசமாக அழுகிய நிலையில் இருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.

மாயமான இரு பல்கலைக்கழக மாணவர்கள்... அதிகாரிகள் வெளியிட்ட பயங்கரமான பின்னணி | Tampa Sheriff Gruesome Update

வேதியியல் பொறியியல் முனைவர் பட்ட மாணவியான பிரிஸ்டி பல்கலைக்கழக வளாகத்திலேயே தங்கி வந்துள்ளார். புளோரிடா பல்கலைக்கழக மாணவரான அபுகர்பியே ஏப்ரல் 16 அன்று லிமோனையும் பிரிஸ்டியையும் தம்பாவிலிருந்து கிளியர்வாட்டருக்கு அழைத்துச் சென்றிருந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, அவர் கொலை செய்ததற்கான ஆதாரங்களும் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது. இதனையடுத்து ஏப்ரல் 24 அன்று தம்பாவில் உள்ள ஒரு குடியிருப்பில் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *