இலங்கை இளையோர் மகளிர் அணிக்கு டி20 தொடர் வெற்றி

1 Min Read

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் முக்கோண டி20 தொடரின் 6ஆவது மற்றும் கடைசிப் போட்டியில், அவுஸ்திரேலிய அணியை 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி பரபரப்பு வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி, இத்தொடரை முழுமையாக கைப்பற்றியது.

பிரிஸ்பேனில் உள்ள இயன் ஹீலி ஓவல் மைதானத்தில்நேற்று முன்தினம் (18) நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. மன்சா திலகரட்ன 43 பந்துகளில் 35 ஓட்டங்களை பெற்றார்

பதிலெடுத்தாடிய ஆஸி. மகளிர் இளையோர் அணி 19.5 ஓவர்களில் 96 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

பந்துவீச்சில் அணித்தலைவி சமோதி ப்ரபோதா 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சஷினி கிம்ஹானி 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *