இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் கடைசி இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் உபாதையில் இருந்து மீண்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண இணைந்துள்ளார்.
டி20 உலகக் கிண்ணத்தில் உபாதைக்கு உள்ளான பதிரண, இலங்கை கிரிக்கெட் சபையின் தடையில்லா சான்றிதழை கடந்த வாரம் பெற்ற நிலையில் நேற்று முன்தினம் (18) இரவு கொல்கத்தா அணியுடன் இணைந்ததை அந்த அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது. பதிரணவை கொல்கத்தா அணி ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் இந்திய நாணயப்படி 18 கோடி ரூபாவுக்கு வாங்கி இருந்தது. எனினும் உபாதை காரணமாக அவரால் ஆரம்பப் போட்டிகளில் ஆட முடியாமல் போனது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபையின் கட்டாய உடல் தகுதி சோதனையில் வெற்றி பெற்றதை அடுத்தே அவரால் கொல்கத்தா அணியில் இணைய முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா அணி இம்முறை ஐபிஎல் தொடரின் முதல் ஆறு போட்டிகளிலும் (நேற்றைய போட்டி தவிர்த்து) ஒரு வெற்றியைக் கூட பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



