அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 2018 பிளாஸ்டர் அணி சம்பியனாகியது அந்-நூர் மகா வித்தியாலயத்தின் 17 பழைய மாணவ அணிகள் கலந்து கொண்ட இச்சுற்றுப் போட்டி வித்தியாலய மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை (13) அமைப்பின் செயலாளர் ஐ.எம் வாஜித் தலைமையில் இடம்பெற்றது.

இதன் இறுதிப் போட்டியில் 2004 அணியினரை 53 ஓட்டத்தினால் 2018 பிளாஸ்டர் அணியினர் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்துடன் 15 ஆயிரம் ரூபா பணப்பரிசினையும் பெற்றதுடன் இரண்டாமிடம் பெற்ற 2004 அணியினர் கிண்ணத்துடன் 10 ஆயிரம் ரூபா பணப் பரிசையும் வென்றனர்.




