இலங்கையின் பல பகுதிகளுக்கு பலத்த வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை எச்சரிக்கை
இலங்கையின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்கம் தொடர்பான வானிலை எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதி மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேல் குறிப்பிட்ட பகுதியில், பிற்பகல் 2 மணிக்கு பிறகு இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்றும், மழையின் போது பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கனமழை பெய்யும் போது அப்பகுதியில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.




