இந்தியாவிற்கு அனைத்து கச்சா எண்ணெய்யையும் வழங்க தயார் – ரஷ்யா

1 Min Read

உலகளாவிய எரிசக்தி ஓட்டம் சீர்குலைந்தால், இந்தியாவிற்கு தேவையான அனைத்து கச்சா எண்ணெய், எரிவாயுவையும் வழங்க தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

கத்தார் எனர்ஜி நிறுவனம்

ஈரானிய ட்ரோன்களின் தாக்குதலுக்குப் பிறகு, கடந்த 2ஆம் திகதி அன்று கத்தார் எனர்ஜி நிறுவனம் முன்னதாக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது.

russia ready supply oil to india if conflict drags

இந்த அறிவிப்பால் ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு விலை அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், மேற்கு ஆசியாவில் மோசமடைந்து வரும் சூழ்நிலை உலகளாவிய எரிசக்தி ஓட்டத்தை சீர்குலைத்தால், இந்தியாவிற்கு தேவையான அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயுவையும் வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் எரிசக்தி தேவை

ரஷ்ய கூட்டமைப்பின் தூதரகத்தின் மூத்த அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், “எந்தவொரு நீடித்த விநியோக நெருக்கடியின்போதும் ரஷ்யா தலையிடத் தயாராக உள்ளது” என கூறியுள்ளார்.

அதேபோல், எரிசக்தி விநியோகத்தில் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டால், இந்தியாவின் எரிசக்தி தேவைகளுக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற நாங்கள் தயாராக உள்ளோம் என்று அதிகாரி ஒருவர் கூறியதாக பிடிஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா தனது கச்ச எண்ணெய் மற்றும் LNG இறக்குமதியில் கணிசமான பகுதிக்கு மேற்கு ஆசியாவை பெரிதும் நம்பியுள்ளது. ஆனாலும், தங்களிடம் போதுமான இருப்புகள் உள்ளதாக பெட்ரோலிய அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

Narendra Modi/Vladimir Putin

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *