இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ள நிலையில், நெதன்யாகு உயிருடன் உள்ளாரா என பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஈரான் – இஸ்ரேல் போர்
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில், ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமெனி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால், மத்திய கிழக்கு முழுவதும் இந்த போர் விரிவடைந்து வருகிறது.
நெதன்யாகுவின் நிலை?
இந்த சூழலில், இன்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை(IRGC) இஸ்ரேலில் உள்ள பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப்படை தளபதியின் தலைமையகத்தையும் குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் கைபர் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், அச்சுறுத்தலைத் தடுக்க தற்காப்பு அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்(IDF) கூறியுள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நிலை என்ன அவர் உயிருடன் உள்ளாரா அல்லது கொல்லப்பட்டாரா என சமூகவலைத்தளங்களில் பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிரதமர் அலுவலகம் மீதான எந்த தாக்குதலையும் இஸ்ரேல் உறுதிப்படுத்தவில்லை.




