ஈரானில் இடைக்கால உச்ச தலைவர் நியமனம்: யார் இந்த அயத்துல்லா அலிரேசா அராஃபி?

1 Min Read

ஈரானின் இடைக்கால உச்சத் தலைவராக அயத்துல்லா அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளார்.

3 பேர் கொண்ட இடைக்கால குழு

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து, நாட்டின் நிர்வாக மற்றும் அரசு பணிகளை கவனித்து கொள்வதற்காக 3 பேர் கொண்ட இடைக்கால குழு அமைக்கப்பட்டு இருப்பதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.

இந்த 3 பேர் கொண்ட குழுவில் நாட்டின் உச்ச தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்ட பாதுகாவலர் குழுவின் உறுப்பினர் அயத்துல்லா அலிரேசா அராஃபி, உச்ச நீதிமன்ற நீதிபதி குலாம் ஹொசைன் மொஹ்சேனி-எஜேய் மற்றும் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

88 உறுப்பினர்கள் கொண்ட நிபுணர்கள் அவை  ஈரானின் 111 வது பிரிவு அரசியலமைப்பு சட்டத்தின்படி புதிய உச்ச தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை இந்த குழு நாட்டின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் இடைக்கால உச்ச தலைவர் நியமனம்: யார் இந்த அயத்துல்லா அலிரேசா அராஃபி? | Iran New Interim Supreme Leader Alireza Arafi

இடைக்கால உச்ச தலைவர்

இடைக்கால குழுவில் இடம்பெற்றுள்ள அயத்துல்லா அலிரேசா அராஃபி ஈரான் நாட்டின் இடைக்கால உச்ச தலைவராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அயத்துல்லா அலிரேசா அராஃபி ஈரானின் பாதுகாப்பு சபையின் உறுப்பினர் மற்றும் மத கல்விக்கூடங்களின் தலைவர் ஆகிய முக்கிய பொறுப்புகளில் உள்ளார்.

ஈரானின் மெய்போட் நகரில் 1959ம் ஆண்டு பிறந்த அயத்துல்லா அலிரேசா அராஃபி, ஈரானின் உயரிய  “அயதுல்லா” மத பட்டத்தை பெற்றவர் ஆவார்.

முன்னாள் உச்ச தலைவர் அலி காமெனியின் நெருங்கிய உதவியாளராக இருந்த இவர், ஈரானின் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அதிகார மையத்தை இயக்கும் முக்கிய பொறுப்பாளராக உள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *