சுவிஸ் மீதான வரி 30% இருந்து 39% ஆக உயர்த்தியது ஏன்? டிரம்ப் அளித்துள்ள விளக்கம்

1 Min Read

சுவிட்சர்லாந்து மீதான வரியை 30% இருந்து 39% உயர்த்த என்ன காரணம் என்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விளக்கியுள்ளார்.

சுவிட்சர்லாந்து மீதான 39% வரி

சுவிட்சர்லாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை 39% ஆக உயர்த்தி அமெரிக்கா அறிவித்துள்ளது.

முதலில் 30% வரி விதிப்பு மட்டுமே விதிக்கப்பட்டிருந்த நிலையில், எதற்காக கூடுதலாக 9% வரி விதிப்பு உயர்த்தப்பட்டது என்ற காரணத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் மீதான வரி 30% இருந்து 39% ஆக உயர்த்தியது ஏன்? டிரம்ப் அளித்துள்ள விளக்கம் | Trump Says Why Tax Rate Increase On Switzerland

தொலைபேசி அழைப்புக்கு பிறகு நடந்த மாற்றம்

பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய டிரம்ப், வரி விதிப்பு அறிவிப்பு வெளியான பிறகு சுவிட்சர்லாந்து தரப்பில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது.

முதலில் அதை சுவிஸ் பிரதமர் என்று கருதினேன், ஆனால் அது சுவிஸ் கூட்டாட்சி கவுன்சில் உறுப்பினர் கரின் கெல்லர்.

அவர் தன்னிடம், “சுவிட்சர்லாந்து ஒரு சிறிய நாடு, எனவே வரி சுமையை சுவிஸ் மீது செலுத்த வேண்டாம் என்று கூறினார்”.

நான் அதற்கு, “நீங்கள் சின்ன நாடாக இருக்கலாம், ஆனால் அமெரிக்காவுடனான வர்த்தகத்தின் மூலம் 42 பில்லியன் டொலர் உபரி உங்களுக்கு கிடைப்பதாக எடுத்துக் கூறினேன்.

அதன் பிறகும், அவர் மீண்டும் மீண்டும் சுவிஸ் ஒரு சிறிய நாடு என்று பேசிக் கொண்டே இருந்தார், அவர் பேசிய விதம் எனக்கு பிடிக்கவில்லை. எனவே தான் சுவிட்சர்லாந்து மீதான வரியை 30% லிருந்து 39% ஆக உயர்த்தினேன் என்று தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *