ஒரே இரவில் உக்ரைனை சூழ்ந்த 330 டிரோன்கள்: சுட்டு வீழ்த்திய உக்ரைன் விமானப்படை

1 Min Read

ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்து இருப்பதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.

இரவோடு இரவாக தாக்குதல்

இரவோடு இரவாக ரஷ்ய படைகள் உக்ரைன் மீது நடத்திய மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் இதுவாகும்.

கிட்டத்தட்ட 330 ஆளில்லா ரஷ்ய விமான ட்ரோன்கள் உக்ரைனை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன் இந்த தாக்குதலில் ரஷ்யா அதிவேக ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் உக்ரைனிய வான்பாதுகாப்பு படை ரஷ்யாவின் இந்த அத்துமீறிய தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

ஒரே இரவில் உக்ரைனை சூழ்ந்த 330 டிரோன்கள்: சுட்டு வீழ்த்திய உக்ரைன் விமானப்படை | Ukraine Air Force Shot Down Or Killed 297 Drones

குர்ஸ்க், மில்லெரோவோ, ஓரல், பிரையன்ஸ்க் மற்றும் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள டொனெட்ஸ்க் ஆகிய பல இடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் Shahed, Gerbera, Italmas ஆகிய ரகங்களை சேர்ந்த 328 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதில் அதிநவீன கின்ஷால், எரோபாலிஸ்டி மற்றும் KH 59/69 போன்ற வான்வழி ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்ட தகவல் படி, உக்ரைனை நோக்கிய சீறிப்பாய்ந்த ட்ரோன்களில் 200 க்கும் அதிகமானவை ஷாஹெட்  மற்றும் காமிகாஸே டிரோன்கள் அடங்கும்.

தடுத்து நிறுத்திய உக்ரைன்

ரஷ்யாவின் அத்துமீறிய இந்த நடவடிக்கையின் போது  உக்ரைனின் வான்பாதுகாப்பு அமைப்புகள் சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நண்பகல் வரை கிடைத்த தகவலில், கிட்டத்தட்ட 297 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

பலமான வான் பாதுகாப்பு காரணமாக ரஷ்ய ஏவுகணைகள் இலக்கை அடைய முடியாமல் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *