மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு

Admin
By
Admin
1 Min Read

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

மோசமான காலநிலை காரணமாக (26) திங்கட்கிழமை முதல் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

நீர்த்தேக்கத்திற்கு கீழ் கொத்மலை ஓயா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மலையகத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. தொடர்ந்தும் மழை அதிகரிக்கும் நிலையில் அனைத்து வான் கதவுகளும் தன்னியக்கமாக திறப்பதற்கான சாத்தியம் நிலவுகிறது இதனால் கொத்மலை ஓயாவை பயன்படுத்துவோர் அவதானத்துடன் செயற்படவேண்டுமென நீர் தேக்கத்துக்கு பொறுப்பான பொறியியளாலர் அறிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *