கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்களிலிருந்து 463 கிலோ ஐஸ் மீட்பு

2 Min Read
  • பாகிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்டதாக சந்தேகம்
  • சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பகுதி தொழிலதிபர் கைது

கொழும்பு துறைமுகத்தில் இரண்டு கொள்கலன்களிலிருந்து நேற்று 800 கோடி ரூபா பெறுமதியான ஒரு தொகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இந்த போதைப் பொருள் தொடர்பில், தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேற்படி கொள்கலன்களில் சூசகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 463 கிலோ ஐஸ் ரக போதைப் பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்திருந்த இரகசிய தகவலையடுத்து நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக் கொண்டுள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள், இது தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, குறித்த கொள்கலனில் சூசகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மேற்படி போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொள்கலனில், துவாய்களால் சுற்றப்பட்ட நிலையில் சூசகமாக மறைத்து வைக்கப்பட்டு இந்த போதைப் பொருள் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.பாகிஸ்தானிலிருந்து மேற்படி போதைப்பொருள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளமை ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இது தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அசோக தர்மசேன;
கொழும்பு துறைமுகத்தில் இரண்டு கொள்கலன்களிலிருந்து சுமார் 463 கிலோகிராம் கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் எனப்படும் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 800 கோடி ரூபாவுக்கும் அதிகமென்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மற்றும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் ஆகியவை இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளன.இதன்போது சந்தேகத்திற்கிடமான இரண்டு கொள்கலன்கள் சோதனையிடப்பட்டு, சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் அவை திறக்கப்பட்டுள்ளன.

பின்னர், அவற்றில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் எடையிடப்பட்டதுடன்இதுவரை மேற்கொள்ளப்பட்ட எடையீட்டின் அடிப்படையில் சுமார் 463 கிலோகிராம் கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொடையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *