நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 623 ஆக அதிகரித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாள திடீர் வெள்ள அனர்த்த உயிரிழப்பு 579 ஆக அதிகரிப்பு (8.16am)
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இதுவரை 579 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, இந்த அனர்த்தத்தினால் தற்போது வரை சுமார் 2,000 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் அனர்த்த நிவாரண முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அனர்த்தத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்காக மீட்பு நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, இவ்வாறான நடவடிக்கைக்கு அமைய, சிலரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்வனர்த்தத்தில் சிக்கிய 4,000 இற்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் திபெத் பகுதியிலும் இதன் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 554 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த புதன்கிழமை (26) சீன – நேபாள எல்லையில் இடம்பெற்ற பனிமலை பாறை சரிவின் காரணமாக ஏற்பட்ட பாரிய நீர்ப்பாய்ச்சல் காரணமான திடீர் வெள்ளப்பெருக்கினால் இவ்வனர்த்தம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.




