உணவுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மெரோக்கோ-இந்தியா

1 Min Read

விவசாய வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் உணவுப் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ஆபிரிக்க நாடான மொரோக்கோவும் இந்தியாவும் தயாராகியுள்ளன. மொரோக்கோவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் வர்த்தகம், கைத்தொழில், இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இராஜாங்க அமைச்சர் ஜிதின் பிரசாதா இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்திய-மொரோக்கோ கூட்டு ஆணைக்குழுக் கூட்டத்திற்கு மொேராக்கோவின் தொழில் மற்றும் வெளிநாட்டு வர்த்தகத் துறை இணை அமைச்சர் ஓமர் ஹெஜிராவும் இந்தியாவின் வர்த்தகம் கைத்தொழில், இலத்திரனியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இராஜாங்க அமைச்சர் ஜிதின் பிரசாதாவும் இணைத்தலைமை வழங்கியுள்ளனர்.

மொரோக்காவுக்கு விஜயம் செய்துள்ள இந்திய இராஜாங்க அமைச்சர் இருநாடுகளுக்கும் இடையிலான கைத்தொழில் மற்றும் வர்த்தக பொருளாதார ஒத்துழைப்பை விரிபடுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டுள்ளார்.

இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் வர்த்தகப் பன்முகப்படுத்தல், சந்தை அணுகல், முதலீடு மற்றும் கைத்தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன. பசளை, விவசாயம், மருந்து, எரிசக்தி மற்றும் சுரங்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் மாற்றம் உள்ளிட்ட துறைகளில் இப்பேச்சுவார்த்தைகளின் போது முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளன. ஏ.என்.ஐ

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *