அரச மருந்தாளர் சங்கம் 31 ஆம் திகதி ஒரு நாள் வேலைநிறுத்தம்!

Admin
By
Admin
1 Min Read

அரச மருந்தாளர் சங்கம் வரும் 31 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் ஒரு நாள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

தங்களது மேலதிக நேர கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

2026 ஓகஸ்ட் 29 ஆம் திகதியை அடிப்படையாகக் கொண்டு சுகாதாரச் செயலாளரினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதில் மருந்தாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகளின் பெயர் “மேலதிக நேர கொடுப்பனவுகள்” எனத் திருத்தப்பட்டிருந்தது.

அதன்பின்னர், ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்தக் காரணமும் தெரிவிக்கப்படாமல், மருத்துவச் சேவையின் தலையீடு காரணமாக அச்சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் பி. திலகரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், இதுவரை இப்பிரச்சினைகளுக்கு அதிகாரிகளால் திருப்திகரமான தீர்வு வழங்கப்படவில்லை.

எனவே, குறித்த சுற்றறிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு கோரியும், அதற்கு அழுத்தம் கொடுத்தும் இந்த ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அஜித் பி. திலகரத்ன தெரிவித்துள்ளார்.

மானிதாபிமானக் காரணங்களைக் கருத்திற் கொண்டு அனைத்து மகப்பேறு மற்றும் குழந்தைகள் வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகள் மற்றும் மனநல வைத்தியசாலைகள் இந்த வேலைநிறுத்தத்தில் இருந்து விலக்களிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஏனைய அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தந்த நிறுவனங்களின் தலைவர்கள் முதன்மை மருந்தாளர்களைத் தொடர்புகொண்டு சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தத் தொழிற்கலையக நடவடிக்கை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *