எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தில் இந்தியா – மொரிஷியஸ் கைச்சாத்து

1 Min Read

நீண்ட கால எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தில் இந்தியாவும் மொரிஷியஸும் கையெழுத்திட்டுள்ளன. மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ச்சூழலின் பின்புலத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்திய பெற்றோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மொரிஷியஸ் நாட்டுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது அந்நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் பரிமாறப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, மொரிஷியஸின் பெற்றோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றின் முழுமையான இறக்குமதித் தேவையையும் ஐ.ஒ.சி (இந்தியன் ஒயில் கோர்ப்பரேஷன்) பூர்த்தி செய்யவிருக்கிறது.

இதேவேளை, பெற்றோலியப் பொருட்கள் விநியோகம், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் உயிரியல் எரிபொருட்கள் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமும் பரிமாறப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், மொரிஷியஸின் பெற்றோல், அதிவேக டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றின் முழு இறக்குமதித் தேவையையும் ஐ.ஓ.சி வழங்கும். அத்தோடு மொரிஷியஸின் மெர் ரூஜில் உள்ள எம்.ஏ.பி லேண்டில் 27,500 தொன் கொள்ளளவு கொண்ட எரிபொருள் சேமிப்பு நிலையம் 25 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்று ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *