இஸ்ரேலுடனான பாதுகாப்பு பேச்சு மீண்டும் ஆரம்பமாகும்

1 Min Read

நம்பிக்கை இல்லாத நிலையிலும் இஸ்ரேலுடனான பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகும் என்று சிரிய வெளியுறவு அமைச்சர் அசாத் அல்-ஷைபானி தெரிவித்துள்ளார்.

சிரிய நிலத்திலிருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கு வழிவகுக்கும் என நம்பப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த இப்பேச்சுவார்த்தைகள் விரைவில் மீண்டும் தொடங்கும் என அவர் கூறியுள்ளார்.

சிரியாவின் ஒரு சிரிய விமானப்படைத் தளத்தின் மீது இஸ்ரேல் குண்டு வீசிய சில நாட்களுக்குப் பிறகு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள சிரிய வௌிவிவகார அமைச்சர், இராஜதந்திரத்திற்கான கதவு திறந்திருப்பதால், இந்த வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்பதே டமஸ்கஸின் முன்னுரிமை என்றும், இந்தத் திசையில் நம்பிக்கையை உருவாக்கும் நடவடிக்கைகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் புதிய கூட்டாளியான சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷராவின் அரசாங்கத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை உருவாக்க வொஷிங்டன் ஒரு வருடத்திற்கும் மேலாக முயன்று வருகிறது. தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறும் இஸ்ரேல், சிரியப் பகுதிக்குள் படைகளை அனுப்பி, அரசாங்க சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தியதால், இந்த ஒப்பந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தமை தெரிந்ததே.

ரொய்ட்டர்ஸ்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *