பார்வையற்றோருக்கான AI கண்ணாடி – நைஜீரிய இளைஞர் கண்டுபிடிப்பு

1 Min Read

Nigerian youth builds AI Glasses for blind: பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.

AI கண்ணாடி

நைஜீரியாவின் கானோ நகரத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் கலீஃபா அமினு (Khalifa Aminu), பார்வையற்றோர் மற்றும் குறைந்த பார்வையுடையோருக்காக புதிய AI கண்ணாடி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இந்த கண்ணாடி, தடைகளை கண்டறிந்து, பயனாளியின் இருப்பிடத்தை (location) கண்காணித்து, அவர்களுடன் பேசும் திறனையும் கொண்டுள்ளது.

Nigerian-Youth-Builds-AI-Glasses-for-Blind

அமினு தனது கண்டுபிடிப்பை சமூக வலைதளமான X-ல் வெளியிட்டார். “இந்த AI கண்ணாடி, சென்சார்கள் மற்றும் GPS தொழில்நுட்பத்தை இணைத்து, பார்வையற்றோர் சுயமாகச் செல்ல உதவும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

முக்கிய அம்சங்கள்:

முன் உள்ள தடைகளை கண்டறிந்து எச்சரிக்கை வழங்கும்.

GPS மூலம் பயனாளியின் இருப்பிடத்தை அறிய உதவும்.

பயனாளர் தவறி வழி தவறினால், அவர்களின் இருப்பிடத்தை WhatsApp அல்லது Email மூலம் குடும்பத்தினருக்கு அனுப்பும்.

AI மற்றும் voice interaction மூலம், சுற்றுப்புறத்தை விளக்கிக் கூறும் திறன்.அமினு தனது சமூகத்தில் பார்வையற்றோர் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பார்த்து இந்த யோசனையை உருவாக்கினார். ஆரம்பத்தில், குறைந்த செலவில் கிடைக்கும் எலக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்தி prototype உருவாக்கினார்.

பார்வையற்ற ஒருவர் இதைப் பயன்படுத்தி கருத்துக்களை வழங்கியதால், கண்ணாடி வடிவமைப்பில் பல மேம்பாடுகள் செய்யப்பட்டன.

முதலில், எச்சரிக்கை ஒலி (beep) மட்டுமே வழங்கிய prototype, தற்போது AI, GPS, voice interaction ஆகியவற்றை இணைத்துள்ளது. இதனால், பயனாளி தடைகளைத் தவிர்ப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுப்புறத்தைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது.

நைஜீரியாவின் National Commission for Persons with Disabilities மற்றும் Kano Patriotic Front ஆகியவை அமினுவின் கண்டுபிடிப்புக்கு ஆதரவு அளித்துள்ளன. இந்த கண்டுபிடிப்பு, பார்வையற்றோரின் வாழ்க்கையை எளிதாக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *